அரிசி பிரச்சினைக்கான தீர்வை வழங்குமாறு வலியுறுத்தி, அரிசி சந்தையில் இருந்து விலகி அரிசி மொத்த வியாபாரிகள் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாக கொழும்பு கோட்டை அரிசி வியாபாரிகள் தெரிவித்தனர்.
அவர்கள் வழங்கிய முன்மொழிவில், நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகளின் சோதனைகள் அரிசி வியாபாரத்திற்கு ஒரு தடையாக இருப்பதாகவும், அரசாங்கம் அரிசி பிரச்சினைக்கு சரியான தீர்வை வழங்கிய பின்னர், நுகர்வோர் விவகார அதிகாரசபை அந்த சுற்றிவளைப்புகளை செயல்படுத்த வேண்டும் என்று வணிகர்கள் கருதுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.