ஜனாதிபதியின் யாழ் விஜயம்!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளதோடு, வல்வெட்டித்துறை மற்றும் சாவகச்சேரி பிரதேசங்களிலும் கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.

யாழ் வருகை தரும் ஜனாதிபதி வடக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து மிகுந்த கவனம் செலுத்த உள்ளார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வேளையில், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் சேர்த்துக் கொள்வதற்கான 20 முக்கிய விடயங்களை உள்ளடக்கிய விடயதானங்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பிரதீபனுக்கு வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி யாழ் வருகை தரும் சந்தர்ப்பத்தில் வடக்கு – கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஜனவரி 29 ஆரம்பித்துள்ளது.

வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலை வழங்குவதாக பல அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளித்த போதிலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சுமார் 21000 பட்டதாரிகள் வேலையின்றி இருப்பதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறுகின்றனர்.

மேலும் பட்டதாரிகளுக்கு போட்டிப் பரீட்சையின்றி வேலைவாய்ப்பை வழங்குமாறும் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜனாதிபதியின் யாழ் விஜயத்தின் அவரது கவனத்தை ஈர்க்கும் நோக்கில் பட்டதாரிகள் தமது பிரச்சினைகள் தொடர்பில் இந்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply