யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமாகியது!

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (31) காலை 10 மணியளவில் ஆரம்பமானது.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர்கள், யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன், திணைக்கள தலைவர்கள், முப்படைகளின் பிரதிநிதிகள், பொலிஸ் உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், துறைசார் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த கூடத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு வகையான பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டு வருகிறது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply