இலங்கையில் உள்ள அனைத்து இனங்களின் கலாச்சாரங்கள், பாரம்பரியங்கள் மற்றும் விழுமியங்களை குறிக்கும் வகையில் ஒக்டோபர் மாதம் விசேட தினமொன்று அறிவிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இன்று (31) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.