தமிழரசு கட்சியின் அரசியல் குழு நாளை மறுதினம் திருமலையில் கூடுகின்றது!

தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் எதிர்வரும் சனிக்கிழமை திருகோணமலையில் நடைபெறவுள்ளது. கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் முற்பகல் 11 மணியளவில் இந்தக் கூட்டம் ஆரம்பமாகவுள்ளது.

தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெறவுள்ள மேற்படி கூட்டத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம், அரசியல் குழுவின் உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், ப.சத்தியலிங்கம், சி.வி.கே.சிவஞானம் மற்றும் எஸ்.எக்ஸ்.குலநாயகம் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன்போது தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் விவகாரம் உட்பட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்படும் என்று கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir