
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உலகளாவிய நிகழ்வுகள் குறித்து விசேட உரை நிகழ்த்துவதற்காக இன்று (27) இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இந்த நிகழ்வு நாளை (28) புது டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் சர்வதேச இராஜதந்திரிகளின் பங்கேற்புடன் நடைபெறவுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் கனேடிய பிரதமர் ஸ்டீபன் ஹாபர், முன்னாள் அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் ஆகியோரும் இங்கு உரை நிகழ்த்தவுள்ளனர்.
தெற்காசியா குறித்த சொற்பொழிவை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிகழ்த்தவுள்ளமை விசேட அம்சமாகும்.
இந்த இந்திய பயணத்தின் போது ரணில் விக்ரமசிங்கவிற்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் ஒரு சந்திப்பும் இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.