
முன்னாள் ஜனாதிபதிகள் தமது நிர்வாகத்தின் போது வெளிநாட்டு பயணங்களுக்கு செலவிடப்பட்ட பணம் தொடர்பில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்றைய (27) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போது வெளிகொணர்ந்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
2010 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெளிநாட்டு பயணங்களுக்கு 3572 மில்லியன் ரூபாவும், 2015 ஆம் ஆண்டு முதல் முதல் 2019ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு 384 மில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டுள்ளது.
2020 முதல் 2022 வரையிலான இரண்டு வருட காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு 1262 மில்லியன் ரூபாவும், 2023 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு 533 மில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டுள்ளது.
ஆனால் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு 2024 ஆம் ஆண்டு முதல் 2025 பெப்ரவரி மாதம் வரையான காலப்பகுதியில்
1.8 மில்லியன் ரூபா மாத்திரமே செலவிட்டுள்ளோம்.
நாங்களும் வேலை செய்கிறோம், வெளிநாடுகளுக்கும் பயணம் செய்துள்ளோம், மக்களுக்காக உழைத்துள்ளோம். மக்களின் பணத்தை முகாமைத்துவம் செய்வதை சொற்களில் மாத்திரமல்லாது செயலிலும் காண்பித்துள்ளோம்” என்றார்.
மேலும் முன்னாள் ஜனாதிபதிகள் அதிகளவான நிதியை வெளிநாட்டுப் பயணங்களுக்காக செலவிட்டதாக சுட்டிக்காட்டிய பிரதமர்
பணியுடன் தொடர்புடையவர்கள் மாத்திரமே அவர்களுடன் இணைந்து பயணம் மேற்கொள்ள முடியும் என்ற போதிலும் கடந்த காலங்களில்
அவ்வாறு இடம்பெறாத செயற்பாடுகள் ஊழல் என்றும் தெரிவித்தார்.