
அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுக்கும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் இடையில் நாடாளுமன்றத்தில் இன்று வாய்த்தர்க்கம் ஏற்பட்டிருந்தது.
சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களைப் புறக்கணித்து ஒருதலைப்பட்சமாகச் செயற்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் குற்றம் சுமத்தினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
“தான் உட்பட பல கட்சித் தலைவர்கள் வேண்டுமென்றே நாடாளுமன்ற அலுவல் பற்றிய குழுவிலிருந்து வெளியேற்றப்பட்டோம்.
ஜனாதிபதி தன்னை நாடாளுமன்ற அலுவல் பற்றிய குழுவில் இணைத்துக் கொள்ளவதாக உறுதியளித்திருந்தார்
ஜனாதிபதி உறுதியளித்தும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு தனக்கு அனுமதி வழங்கவில்லை” என்றார்.
எனினும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமின் கூற்றுக்கு மறுப்பு தெரிவித்ததுடன் அவரின் குற்றச்சாட்டையும் என்சார்ட் அறிக்கையிலிருந்து நீக்குமாறு தெரிவித்தார்.