ஹெரோய்ன் கடத்தல் இளைஞரும், வயதான பெண்ணும் கைது

முச்சக்கரவண்டியொன்றில் பிறவுன் சுகர் ஹெரோய்ன் போதைப்பொருளை கடத்திச் சென்றதாக கூறப்படும் இளைஞர் ஒருவரும், வயதான பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரிலேயே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 66 மற்றும் 22 அகவைகளை கொண்டவர்களாவர்.

இவர்கள் இருவரும் தமது உள்ளாடைகளில் மறைத்து வைத்திருந்த 10 மற்றும் 410 கிராம் பிறவுன் சுகர் போதைப்பொருள் பொலிஸாரால் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த போதைப்பொருட்களின் சந்தைப் பெறுமதி ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு மட்டக்குளியைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir