கிளிநொச்சி கனகபுரத்தில் விபத்து இருவர்பலி ஒருவர் காயம்

கிளிநொச்சி கனகபுரம் டிப்போ வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்த மூன்று இளைஞர்கள் விபத்துக்குள்ளாகியத்தில் இருவர் பலியாகியதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் இன்று மாலை ஐந்து மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்தில் பலியாகியதுடன், ஒருவர் படுகாயம் அடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி நோக்கி மோட்டார் சைக்கிள் ஒன்றில் மூன்று இளைஞர்கள் பயணித்துள்ளனர். இதன் போது டிப்போ கனகபுரம் வீதியில் மாவீரர் துயிலுமில்லம் பகுதியின் வீதி வளைவில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி வேலி தூண்களில் மோதுண்டு இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்தில் 18 வயது மதிக்கதக்க இரு இளைஞர்கள் பலியாகியதுடன், 20 வயதுடைய மற்றுமொரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி கோணாவில் காந்திகிராமம் பகுதியை சேர்ந்த 18 வயதான ஞானகுமாரன் கிருசாந்தன் உயிரிழந்துள்ளதுடன், கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியை சேர்ந்த 20 வயதுடைய சர்வநாதன் பவிக்சன் படுகாயமடைந்துள்ளார். உயிரிழந்த மற்றைய இளைஞர் குறித்து இதுவரை தகவல் தெரியவில்லை.

You May Also Like

About the Author: kalaikkathir