மாகாண சபை தேர்தலில் 10 மாவட்டங்களில் தமிழ் முற்போக்கு கூட்டணி போட்டி

நடைபெறப்போகும் மாகாண சபை தேர்தலில் நுவரெலியா, கொழும்பு, கண்டி, பதுளை, இரத்தினபுரி, கேகாலை, கம்பஹா, மாத்தளை, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களில், தமிழ் முற்போக்கு கூட்டணி போட்டியிடும் என அதன் தலைவர் மனோ கணேசன் தெரிவித்திருக்கின்றார்.

“ஒவ்வொரு மாவட்டங்களின் களநிலைமைகளையும் தனித்தனியாக ஆராய்ந்து, தனித்தோ, ஐக்கிய மக்கள் சக்தியில் கூட்டணியாகவோ அல்லது வேறு நட்பு கட்சிகளுடன் கூட்டாகவோ தமுகூ களமிறங்கும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

You May Also Like

About the Author: kalaikkathir