கொரோனா காரணமாக இலங்கையில் இன்று ஒருவர் பலி

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து நாடு திரும்பியிருந்த நிலையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு கொழும்பு தேசிய தொற்று நோயியல் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 47 வயது பெண் ஒருவரே இவ்வாறு சிகிச்சை பலனின்றி இன்று (23) அதிகாலை உயிரிழந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் இதுவரை 12 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

குறித்த பெண் புற்றுநோய் மற்றும் இருதய நோயாலும் பீடிக்கப்பட்டிருந்தாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12ஆக உயர்வடைந்துள்ளது.

இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2,947ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி இதுவரையில் 138 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதோடு, குறித்த தொற்றிலிருந்து 2,798 பேர் பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir