தென்கொரிய ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற லீ ஜே-மியுங், சியோலில் உள்ள தேசிய சபையில் ஜனாதிபதியாக பதவியேற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சர்ச்சைக்குரிய தென் கொரிய ஜனாதிபதி பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய லீ ஜே-மியுங் போட்டியிட்டு 49.31 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றிப்பெற்றார்.
அவருடன் போட்டியிட்ட கிம் மூன் சூ 41.30 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
