மீண்டும் சிறை சென்றார் பிள்ளையான்!!

9வது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வுக்காக மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) சனிக்கிழமை (22.08.2020) மீண்டும் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டார்.

நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்கு விடுக்கப்பட்ட நகர்வுப் பிரேரணைக்கான கோரிக்கைகள் ஏற்கப்பட்டு மட்டக்களப்பு மேல் நீதிமன்றினால் அனுமதி வழங்கப்பட்டதன் பேரில் பிள்ளையான் நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டிருந்தார்.

ஜோசெப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் 2015 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட பிள்ளையான் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுவரும் நிலையில் கடந்த பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய விரும்புவாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவானார்.

You May Also Like

About the Author: kalaikkathir