நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் தொடர்பாக தெளிவுபடுத்தும் பயிற்சி

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் தொடர்பாக தெளிவுபடுத்தும் பயிற்சி நெறியில் கலந்துகொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில் இந்த பயிற்சிநெறி நாளை (செவ்வாய்க்கிழமை) மற்றும் நாளை மறுதினம் நாடளுமன்றத்தின் முதலாவது குழு அறையில் இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த பயிற்சி நெறியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

நாடாளுமன்றத்தின் ஆரம்பகட்ட விடயங்கள் தொடர்பாக தெளிவுபடுத்தும் நோக்கில், இந்த பயிற்சிநெறி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir