சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் ட்வீலா சுற்றுப்புறத்தில் உள்ள மார் எலியாஸ் தேவாலயத்தில் நேற்று (22) நடைபெற்ற தற்கொலை குண்டுவெடிப்பில் இதுவரையில் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டதோடு 63 பேர் காயமடைந்துள்ளதாக அரச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தற்கொலை குண்டுதாரி மார் எலியாஸ் தேவாலயத்தின் உள்ளே நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தி, பின்னர் தனது வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாக சிரியாவின் உள்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
தற்கொலை குண்டுதாரி இஸ்லாமிய அரசு (IS) அமைப்பைச் சேர்ந்தவர் என்றும் இந்த தாக்குதலில் இரண்டு பேர் ஈடுபட்டதாகவும், அதில் தன்னைத்தானே வெடிக்கச் செய்த நபரும் அடங்குவர் என்றும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
