சீமெந்து கூரை விழுந்ததில் கட்டட தொழிலாளி பலி

யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பனைப் பகுதியில் வீடு திருத்த வேலையையில் ஈடுபட்ட கட்டட கூலித்தொலிழாளி ஒருவர் கூரைத்தளத்தை உடைக்க முற்பட்ட வேளை சீமெந்திலான முகப்பு கூரை விழுந்ததில் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாகவும், உயிரிழந்தவர் நவாலி கலையரசி லேனை சேர்ந்த 42 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான அல்டர் போல் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள அதே வேளை மேலதிக விசாரணைகளை சுன்னாகம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir