இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரிச் சலுகையை வழங்கிய டிரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 19% தீர்வை வரி விதித்துள்ளார்.

தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவுடன் கைச்சாத்திடப்பட்ட புதிய ஒப்பந்தத்தின் கீழ், டிரம்ப் இந்த முடிவை எடுத்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தோனேசியா – அமெரிக்க வலுசக்தி மற்றும் விவசாய உற்பத்திகளுடன், பில்லியன் கணக்கான டொலர் பெறுமதியான போயிங் ஜெட் விமானங்களையும் கொள்வனவு செய்ய இணக்கம் ஏற்பட்டதை அடுத்து டிரம்ப் இந்த சலுகையை வழங்கியுள்ளார்.

அதன்படி, இந்தோனேசியாவுக்கு முன்னர் அறிவித்த 32% தீர்வை வரியை 19% ஆக குறைக்க டிரம்ப் முடிவு செய்துள்ளார்.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply