இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் இறுதிப் போட்டி!

சர்வதேச கிரிக்கட் பேரவையின் (ஐசிசி) வருடாந்திர மாநாடு சிங்கப்பூரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

அதன்படி எதிர்வரும் 2027, 2029 மற்றும் 2031ஆம் ஆண்டுகளில் நடைபெறவுள்ள ஐ.சி.சி உலக டெஸ்ட் ​செம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகளை நடத்தும் உரிமையை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபைக்கு வழங்கப்பட்டது.

சமீபத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டிகளை வெற்றிகரமாக நடத்திய இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் திறனை அங்கீகரிக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஐ.சி.சி. தெரிவித்தது.

லோர்ட்ஸ் மைதானத்தில் நடந்த உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தென்னாபிரிக்க அணி செம்பியன் பட்டம் வென்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply