ஒரு வேளை உணவிற்கு 296 ரூபாய் செலவு

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு ஒரு வேளை உணவிற்கு 296 ரூபாய் செலவிடப்படுவதாக சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அன்னளவாக மேற்கொள்ளப்பட்ட கணிப்பிற்கு அமைவாக இந்த தொகை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஒரு வேளை உணவிற்காக 3000 ரூபா செலவிடப்படுவதாக வெளியான தகவலையடுத்து ஆளும் மற்றும் எதிர் கட்சி உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்கு பதிலளிக்கையிலேயே சபாநாயகர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் உணவு தயாரிப்பிற்கான அனைத்து செலவினங்களையும் ஒன்று திரட்டி வகுக்கப்பட்டுள்ளதாகவும், சரியான தொகை பின்னர் அறிவிக்கப்படும் என்பதோடு, அன்னளவாக ஒருவருக்கு 296 ரூபாய் செலவிடப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir