2025 ஆம் ஆண்டுக்கான ஆறாவது லங்கா பிரீமியர் லீக் (LPL) இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி வரை நடைபெறும் என்று சிறிலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
லங்கா பிரீமியர் லீக் தொடர் இம்முறை கொழும்பு, பல்லேகலை மற்றும் தம்புள்ளை மைதானங்களில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
வரவிருக்கும் 2026 டி20 உலகக் கிண்ண ஒத்திகையாக இந்தக் காலகட்டத்தில் போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
