தப்பி செல்ல முற்பட்ட சந்தேகநபர் சுட்டுக் கொலை

நவகமுவ பகுதியில், பொலிஸாரிடம் இருந்து தப்பி செல்ல முற்பட்ட சந்தேகநபர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

நேற்று இரவு, இடம்பெற்ற இந்த சம்பவத்தில் இந்துநில் வஜிர குமார எனும் ´இந்ர´ என்கின்ற சந்தேகநபரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

மேலும், சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளவர், கொலை,கொள்ளை, கப்பம் பெறல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களில் தேடப்பட்டு வந்தவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர், நவகமுவ பகுதியில் வைத்து, 10 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் பொலிஸாரால் அண்மையில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir