உலகில் முதன்முறையாக மனித உருவ ரோபோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்!

மனித உருவ ரோபோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் உலகில் முதன்முறையாக சீனாவின் பீஜிங் நகரில் நடாத்தப்படுகின்றது.

நேற்றையதினம் ஆரம்பிக்கப்பட்ட இந்த போட்டிகள் நாளை வரை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனா, அமெரிக்கா, ஜேர்மனி, பிரேசில், ஜப்பான் உள்ளிட்ட 16 நாடுகளைச் சேர்ந்த 280 அணிகள் கலந்துகொள்ளும் இந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் 500க்கும் மேற்பட்ட ரோபோக்கள் பங்கேற்றுள்ளன.

தடகளம், கால்பந்து, குத்துச்சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ் உள்ளிட்ட 26 விளையாட்டுகளில் அவை போட்டியிடுகின்றன.

உலகிலேயே மனித உருவ ரோபோக்கள் மட்டுமே பங்கேற்று நடைபெறும் முதல் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply