இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்தும், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யுமாறு கோரியும் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் காலவரையறை அற்ற போராட்டத்தில் ஏடெடுபட்டு வந்த நிலையில், இன்று (19) தங்கச்சிமடத்தில் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
ராமேஸ்வரம் வட்டார ஆட்சியர் அலுவலகத்தில் நேற்றையதினம் மீனவர்களுடன் வருவாய் கோட்டாட்சியர் ராஜ மணோகரன் தலைமையில் பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றது.
ஆனால் மீனவர்கள் பேச்சுவார்த்தைக்கு உடன்பட மறுத்து எழுந்து சென்றனர்.
கூட்டத்தை விட்டு வெளியே வந்த மீனவர்கள் திட்டமிட்டபடி ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என தெரிவித்தனர்.
அதன்படி இன்று மாலை 4:00 மணிக்கு ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் தாம்பரம் விரைவு ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
