மக்கள் மனதை வென்ற மனிதநேயமான நீதிபதி பிராங்க் கேப்ரியோ காலமானார்!

மக்கள் மனதை வென்ற மனிதநேயமான நீதிபதியாக அறியப்படும் அமெரிக்காவின் மரியாதைக்குரிய நீதிபதி பிராங்க் கேப்ரியோ காலமானார்.

நீதிபதி பிராங்க் கேப்ரியோ தனது 88ஆவது வயதில் நேற்று (20) காலமானதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கணையப் புற்றுநோயுடன் நீண்ட காலமாக போராடி வந்த நிலையில் இந்த இறப்பு நிகழ்ந்துள்ளது.

அமெரிக்காவின் ரோட் தீவு மாநிலத்தில் தலைமை நீதிபதியாக பணியாற்றிய அவர், விசாரணைகளில் அன்பு மற்றும் கருணைக்காக உலகம் முழுவதும் பேசப்பட்டார்.

நீதிபதி பிராங்க் கேப்ரியோ தனது மனிதாபிமான தீர்ப்புகளுக்காகவும், தனக்கென தனித்துவமான நீதி செயல்முறையை அறிமுகப்படுத்தியதற்காகவும் மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒருவராகத் திகழ்ந்தார்.

மனித நேயமிக்க அவரது புரிதலையும் முன்னணியில் கொண்டு வந்த அவரது தனித்துவமான தீர்ப்பளிக்கும் முறையால் மில்லியன் கணக்கான மக்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.

அவர் தனது தீர்ப்புகளை சமூக ஊடகங்களிலும் ஒளிபரப்பியத்துடன், தனது சொந்த யூடியூப் சேனல் மூலம் அவற்றைப் பகிரங்கப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் அவர் ஒரு மரியாதைக்குரிய நீதிபதியாக மட்டுமல்லாமல், அன்பான கணவர், தந்தை, தாத்தா, கொள்ளு தாத்தா மற்றும் நண்பராகவும் நினைவுகூரப்படுகிறார்.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply