இன்றைய வானிலை அறிக்கை!

வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடுத்த சில நாட்களுக்கு மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேற்குறிப்பிட்ட சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில வேளைகளில் மழை பெய்யலாம்.

கொழும்பு முதல் மாத்தறை வரையான கடற்பரப்பில் மழை பெய்யலாம்.

கொழும்பிலிருந்து மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. காலி வழியாக மாத்தறை வரையான கரையோரப் பகுதிகளிலும் மழை பொழியும்.

பொதுவாக, கடற்பரப்புகளில் காற்று மேற்கு முதல் தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 25-35 கிலோமீற்றர் வேகத்தில் வீசும்.

இருப்பினும், மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.

மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

பலத்த காற்றும், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இதனை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply