எறிதல் சம்பியன்ஷிப் போட்டி- ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற இலங்கையர்!

எறிதல் சம்பியன்ஷிப் போட்டி தென் கொரியாவில் நடைபெற்று வருகின்றது.

தென் கொரியாவில் நடைபெற்றுவரும் எறிதல் சம்பியன்ஷிப் போட்டியில் இன்று (22) நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த ருமேஷ் தரங்க தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

ருமேஷ் தரங்க 82.05 மீட்டர் துரத்திற்கு ஈட்டி எறிந்து தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

இந்த போட்டியில் ஜப்பானிய தடகள வீரர் 78.60 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து வெள்ளிப் பதக்கமும், பாகிஸ்தானிய தடகள வீரர் 77.43 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து வெண்கலப் பதக்கமும் வென்றார்.

இதனிடையே, பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த நதீஷா 57.53 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இது அவரது தனிப்பட்ட புதிய அதிகபட்ச செயல்திறனாக கருதப்படுகின்றது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply