322 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 322 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

மத்திய கிழக்கு நாடுகளான ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளுக்கு தொழில் வாய்ப்புகளுக்காக சென்ற இலங்கையர்களே இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.

அதன்படி ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 280 இலங்கையர்களும் கட்டாரின் டோஹாவிலிருந்து 42 இலங்கையர்களும் விசேட விமானங்களின் மூலம் நாட்டை வந்தடைந்தனர்.

விமான நிலையத்தை வந்தடைந்த அனைத்து பயணிகளும் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதனையடுத்து பரிசோதனை முடிவுகள் வரும் வரையில் விமான நிலையத்தை அண்மித்த பகதிகளில் உள்ள ஹோட்டல்களில் அவர்களைத் தங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir