இன்றைய வானிலை அறிக்கை!

வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். சில இடங்களில் 50 மில்லிமீற்றரிற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.

சிலாபம் தொடக்கம் மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.

காற்றானது தென்மேற்குத் திசையிலிருந்து அல்லது மேற்குத் திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 25 முதல் 35 கிலோமீற்றர் வரை காணப்படும்.

மாத்தறை தொடக்கம் பொத்துவில் வரையான அம்பாந்தோட்டை ஊடாக கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.

மாத்தறை தொடக்கம் பொத்துவில் வரையான அம்பாந்தோட்டை ஊடாக கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாக காணப்படும்.

பலத்த காற்றும், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இதனை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply