மதவாச்சி பிரதேசத்தில் ஒருவர் கொலை!

மதவாச்சி பொலிஸ் பிரிவின் வீராமுரிப்புவ, மதவாச்சி பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று அதிகாலை 1.30 மணியளவில் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மதவாச்சி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் படி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சம்பவத்தில் 27 வயதுடைய இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவருக்கும் அவரின் சகோதரியின் கணவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர் குறித்த பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில் மதவாச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir