வவுனியாவில் தீவைக்கப்பட்ட முச்சக்கரவண்டி !

வவுனியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டாரிக்குளம் பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று இனம்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கபட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

நேற்று இரவு குறித்த பகுதியில் வீடொன்றில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சகரவண்டியை இனம் தெரியாத நபர்கள் தீயிட்டு எரித்துவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அறிந்துகொண்ட முச்சக்கரவண்டியின் உரிமையாளர் பொலிசாருக்கு தகவல் தெரிவித்திருந்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா குற்றத்தடுப்பு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir