நேற்று மாத்திரம் 37 கொரோனா நோயாளர்கள் அடையாளம்!!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 37 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3,049ஆக அதிகரித்துள்ளது.

இறுதியாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் 31 பேரும் கட்டாரில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி இதுவரையில் 169 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதோடு, குறித்த தொற்றிலிருந்து 2,868 பேர் பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்றுக்குள்ளாகி இலங்கையில் இதுவரையில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir