மகியங்கனையில் கோர விபத்து – விரிவுரையாளர்கள் ஐவர் படுகாயம்!

பதுளை – மகியங்கனை – சொரணதொட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் விரிவுரையாளர்கள் ஐவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை 2.50 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விரிவுரையாளர்கள் பயணித்த கார் வீதியை விட்டு விலகி 40 அடி பள்ளத்தில் வீழ்ந்தமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது பெண் விரிவுரையாளர்கள் நால்வரும் ஆண் விரிவுரையாளர் ஒருவருமே படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir