முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜிதவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட இரு பிரதிவாதிகளுக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு நேற்று (26) அறிவித்தது.

கிரிந்த மீன்பிடி துறைமுகத்தில் மணல் அகற்றும் பணியை கொரிய நிறுவனத்திற்கு ஒப்படைத்ததால் அரசாங்கத்திற்கு 2.6 மில்லியன் ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுத்தியதாக கூறி குறித்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான வழக்கு நேற்று கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்பாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது விசாரணைகள் முடிவடைந்த பின்னர், சந்தேக நபர்களுக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் மீன்பிடி துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் உபாலி லியனகே ஆகியோர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

அவர்கள் தற்போது நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்த வழக்கு மீண்டும் 2026 ஜனவரி 30 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply