மாவனெல்லை, அளுத்நுவர, மாணிக்காவ பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் 03 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் இன்று (29) காலை இடம்பெற்றுள்ளது.
மதில் சுவர் கட்டிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் அதில் சிக்குண்டிருந்த மூன்று தொழிலாளர்களும் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது மாவனெல்லை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
