மன்னாரில் அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் (29) மன்னாரில் நிர்வாக முடக்கல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இருந்து இன்று (29) முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.
மாவட்ட ரீதியாக முன்னெடுக்கப்படும் இந்த உரிமைக்கான போராட்டத்தில் மதகுருமார்கள், மீனவர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் கலந்துகொண்டு ஆதரவை வழங்கியுள்ளனர்.
மேலும் போராட்டத்தின் இறுதியில் தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஜனாதிபதிக்கு கையளிக்கும் வகையில், மன்னார் மாவட்ட அரச அதிபருக்கு கையளிக்கப்படும் என மன்னார் பிரஜைகள் குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

