இராமநாதன் அர்ச்சுனா பிணையில் செல்ல அனுமதி!

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா கோட்டை பொலிஸாரால் இன்று (29) காலை கைது செய்யப்பட்டிருந்தார்.

வாக்குமூலம் அளிப்பதற்காக கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்த வேளையில் அவர் கைது செய்யப்பட்டார்.

அண்மையில் கொழும்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு நாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா வந்திருந்த வேளையில் வாகனத்தை நிறுத்துவது தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டிருந்தது.

இதன்போது கோட்டை பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவரை திட்டியிருந்தார்.

குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைக்காக கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு இன்று காலை சென்றிருந்த நிலையில், எம்.பி அர்ச்சுனா கைது செய்யப்பட்டார்.

இந்தநிலையில் கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply