பெருந்தொகையான போதை பொருட்களுடன் ஒருவர் கைது!

மட்டக்குளிய பொலிஸ் பிரிவின் சிறிவர்தன வீதிப் பகுதியில் பெருந்தொகையான போதை பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு வடக்கு குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய மேகொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த சந்தேகநபர் நேற்று (29) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்குளிய, சமித்புர பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து விற்பனைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 33 கிலோகிராம் 270 கிராம் ஏஸ், 408 கிராம் ஹெரோயின், 200 போதைப்பொருள் மற்றும் 7,400 ஹெரோயின் (சரஸ்) துண்டுகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட க​​சந்தேக நபர் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரின் நெருங்கிய நண்பர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மட்டக்குளிய பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply