பேருந்து – லொறி மோதி விபத்து- மூவர் வைத்தியசாலையில்!

மிஹிந்தலை, பலுகஸ்வெவ பகுதியில் பேருந்துடன் லொறியொன்று மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

கதிர்காமத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேருந்துடன் அதன் பின்னால் பயணித்த லொறியொன்று மோதி ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த பயணிகள் மிஹிந்தலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply