முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை சந்தித்த மஹிந்த அமரவீர!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை, முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர நேரில் சந்தித்து நலன் விசாரித்துள்ளார்.

இந்த சந்திப்பு தங்காலையிலுள்ள கார்ல்டன் இல்லத்தில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் பின்னர் மஹிந்த அமரவீர ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், மகிந்த ராஜபக்ச ஒரு சகாப்தத்தை உருவாக்கிய தலைவர் என்று கூறியிருந்தார்.

ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை நீக்குதல் சட்டத்தின் விதிகளின்படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை அரசாங்கத்திடம் கையளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கிருந்து வௌியேறி, ஹம்பாந்தோட்டையில் உள்ள கார்ல்டன் இல்லத்திற்கு சென்று தங்கியுள்ளார்.

அன்றிலிருந்து முன்னாள் ஜனாதிபதியை சந்திப்பதற்காக அவரை நேசிக்கும் பல அரசியல்வாதிகள் மற்றும் ஆதரவாளர்கள் பலர் கார்ல்டன் சென்று நலன் விசாரித்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply