இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கம் நாடளாவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானம்!

இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கம் நாடளாவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தல் விடுத்துள்ளது.

இன்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய வேளையில் இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜகத் சந்திரலால் இதனை குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த பட்ஜெட் விவாதத்தில், எங்கள் சேவை யாப்பு திருத்தங்களுடன் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

சேவை யாப்பு மே 1ஆம் திகதிக்குள் வர்த்தமானியில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.

ஆனால் இன்று, அது ஒரு பொய்யான வாக்குறுதியாக மாறிவிட்டது.

கிராம உத்தியோகத்தர் கூட்டணியின் திருத்தங்களுடன் இந்த சேவை யாப்பை உடனடியாக வர்த்தமானியில் வெளியிட்டு அமுல்படுத்துமாறு இந்த அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறோம்.

இல்லையெனில், இந்த அரசாங்கத்திற்கு எதிராக நாங்கள் வீதிகளில் இறங்க வேண்டியிருக்கும்.

அதேநேரம் கடந்த பட்ஜெட்டில் 20 லிட்டர் எரிபொருள் ஒதுக்கீடு குறைக்கப்பட்டது.

ஒன்றிணைந்த கூட்டணியாக வரவிருக்கும் பட்ஜெட்டில் இந்த ஒதுக்கீடுகள் எங்களுக்குக் கிடைக்காவிட்டால், நாடளாவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளோம்- என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply