டிக்கெட் இயந்திரங்களுடன் கூடிய பேருந்துகளில் வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி, பேருந்து கட்டணங்களைச் செலுத்த முடியும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இன்றைய (08) நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த நடைமுறை 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 திகதி முதல் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பொதுப் போக்குவரத்து கட்டண முறையை நவீனமயமாக்குவதை நோக்கமாகக் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டம், படிப்படியாக நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
