நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் தற்போதைய மேலதிக செயலாளர் ராஜபக்ஷ பத்திரகே செபாலிகா சமன் குமாரி இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை இன்று (08) காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் முன்னதாக இழப்பீட்டு அலுவலகத்தின் பதில் பணிப்பாளர் நாயகமாக பணியாற்றியுள்ள நிலையில், அதன்போது ஊழல் மற்றும் பொது சொத்து சட்டத்தின் கீழ் குற்றவியல் முறைகேடுகளுக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
