தொடரும் முத்து நகர் விவசாயிகளின் போராட்டம்!

திருகோணமலை முத்து நகர் விவசாயிகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இன்று 22ஆவது நாளாக தொடர்கின்றது.

குறித்த போராட்டம் திருகோணமலை மாவட்டச் செயலகம் முன்னால் இன்று (08) முன்னெடுக்கப்பட்டது.

தங்களது விவசாய காணிகளை சூரிய மின் சக்தி உற்பத்திக்காக அபகரிக்கப்பட்டதையடுத்து தீர்வு கிடைக்கும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டக்காரர்கள்,

வேண்டாம் வேண்டாம் பொய் வாக்குறுதி,
திருகோணமலையின் நிலங்களையும் வளங்களையும் சூரையாடுவதை நிறுத்து,
எங்களை வாழ விடு,
விவசாயிகளிடமிருந்து கொள்ளையடித்து கம்பனிகளுக்கு வழங்கப்பட்ட முத்து நகர் விளை நிலங்களை உடனடியாக திருப்பிக் கொடு,
அரசே நிறுவனங்களை வைத்து 352 விவசாயிகளை வீதிக்கு இறக்காதே முதலான பல வாசகங்களை ஏந்தியவாறு சத்தியாக் கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply