இலங்கையின் நகர்புறங்களில் மெட்ரோ பஸ்களை அறிமுகப்படுத்தும்
நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
அதன்படி இதன் முதல் கட்டமாக மேல்மாகாணத்தில் 200 பஸ்கள் சேவையில் இணைக்கப்பட உள்ளன.
இதன்பொருட்டு மெட்ரோ பஸ் கம்பனியொன்று (Lanka Metro Transit (Pvt) Ltd) உருவாக்கப்பட்டுள்ளதுடன், அதனை இன்று (08) திறந்துவைக்க உள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
