தேயிலை தொழிற்சாலையில் தீ விபத்து!

மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நல்லதண்ணி, லக்ஷபான தோட்டத்தின் தேயிலை தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த தீ விபத்து இன்று (09) அதிகாலை 1 மணியளவில் ஏற்பட்டுள்ளது.

தேயிலை தூள் உற்பத்திப் பிரிவில் ஏற்பட்ட தீ, தேயிலை இலைகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த சேமிப்பு அறைக்கும் பரவியுள்ளது.

அத்துடன் பொட்டலம் கட்டப்பட்ட தேயிலைத் தூளும் பெருமளவில் எரிந்து சேதமாகியுள்ளது.

பரவிய தீயை ஏனைய பகுதிகளுக்கும் பரவ விடாமல் தோட்ட மக்கள் கட்டுப்படுத்தியிருந்தனர்.

இந்த தீ விபத்து தோட்ட நிர்வாகத்தால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

ஏற்பட்ட தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.

தேயிலை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் தீ விபத்துக்கான காரணம் தொடர்பில் இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நல்லதண்ணி பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply