நீச்சல் தடாகத்தில் மூழ்கி ஐந்து வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
நுகேகொடை, தலபத்பிட்டிய பகுதியைச் சேர்ந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.
குறித்த சம்பவம் நேற்று (08) மாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த சிறுவன் நுகேகொடை, தலபத்பிட்டிய பகுதியில் உள்ள உணவகமொன்றில் ஆரம்ப பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குழுவுடன் நீச்சல் பயிற்யாளரின் உதவியுடன் பயிற்சியில் ஈடுபடுகொண்டிருந்தான்.
இதன்போது சிறுவன் நீரில் மூழ்கியுள்ளான்.
இதனையடுத்து குறித்த சிறுவனை உடனடியாக களுபோவில வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எனினும் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணனைகளை மிரிஹான பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
