உலக தபால் தினம் இன்று!

151வது உலக தபால் தினம் உலகில் உள்ள 193 நாடுகளில் இன்றையதினம் (09) கொண்டாடப்படுகின்றது.

ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் 09ஆம் திகதி அன்று உலக தபால் தினம் கொண்டாடப்படுகின்றது.

அதன்படி இலங்கையில் 56வது தேசிய தபால் தின விழா இன்று காலை பதுளை தபால் வளாக கேட்போர் கூடத்தில், சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்றது.

இதற்கிடையில் தபால் ஊழியர்கள் மேலதிக நேர ஊதியத்தை மோசடியாகப் பெற்றதாக தபால் திணைக்களத் தலைவரின் கூற்றுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், கருப்புப் பட்டை அணிந்து பணிக்குச் செல்லவுள்ளதாக அறிவித்துள்ளன.

இது தொடர்பாக இன்று இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply