யாழ். போதனா வைத்தியசாலையில் இளம் தாய் ஒருவர் பிரசவத்தின் பின் உயிரிழந்துள்ளார்.
நெடுந்தீவைச் சேர்ந்த 25 வயதுடைய கில்மன் நோபட் தர்சிகாமேரி என்பரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (09) இரவு இடம்பெற்றுள்ளது.
குறித்த இளம் தாய் உயர் குருதியமுக்கம் மற்றும் வலிப்பு காரணமாக உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும் இளம் தாய்க்குப் பிறந்த பெண் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சடலம் வைத்திய பரிசோதனைக்குப் பின்னர் உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட்ட வேளையில், இளம் தாய் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சடலத்தை வாங்க மறுத்துள்ளனர்.
வைத்தியசாலையில் தாயின் இறப்புக்கான சரியான காரணம், நேரம் என்பன குறிப்பிடப்படாமையால் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
