பிரிகேடியர்கள் ஐவர் மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு!

76ஆவது இராணுவ தினத்தை முன்னிட்டு பிரிகேடியர்கள் ஐவர் மேஜர் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொன்தா மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரோட்ரிகோ ஆகியோரால் இந்தப் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.

அதன்படி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, போரில் காயமடைந்த ஐந்து பிரிகேடியர்களை அவர்களின் சேவையை அங்கீகரிக்கும் விதமாக மேஜர் ஜெனரல் பதவிக்கு அதிகாரபூர்வமாக பதவி உயர்த்தியுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply